அல்பிரட் துரையப்பாவின் சகபாடியே சீ.வீ.கே?


யாழ் மாநகர சபையில் அல்பிரட் துரையப்பா முதல்வராக பதவி வகித்த காலத்தில் கணக்காளராக சீ.வீ.கே.சிவஞானம் பணியாற்றியிருந்தார்.அத்துடன் அல்பிரட் துரையப்பாவிற்கு ஆலோசனை சொல்லுமளவிற்கு அப்போது அவர் ஆதிக்கம் செலுத்தி வந்திருந்ததாகவும் தெரிவித்துள்ளார் தமிழரசுக்கட்சியின் மூத்த தலைவர்களுள் ஒருவரான மறவன்புலோ சச்சிதானந்தன்.

யாழ்.நகரில் கஸ்தூரியார் வீதியில் கடைகளிற்கென மாநகரசபை காணிகளை  சில வர்த்தகர்களிற்கு முறைகேடாக வழங்கப்பட்டமை தொடர்பில் வடமாகாண அவைத்தலைவர் சீ.வி,கே.சிவஞானம் மீது குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளது.

இத்தகைய ஊழல்களுடன் தொடர்புபடுத்தி தன்மீது முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்  பொய்க் குற்றச்சாட்டுக்கள் என வடமாகாண அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம் இன்று தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் மாநகர சபையின் கடந்த 11 ஆம் திகதி இடம்பெற்ற கூட்டத்தில் உரையாற்றிய மாநகர சபை உறுப்பினர் மு.றெமிடியஸ் யாழ். நகர் மத்தியில் தனியாருக்கு வர்த்தக நிலையங்களை அமைக்க காணி வழங்கியமை தொடர்பிலும் ஆலயக்காணியினை பதவிக் காலத்தில் தனது பெயரில் மாற்றியுள்ளார் என்ற குற்றச்சாட்டுக்களை முன்வைத்திருந்தார்.

குறித்த காணிகளை தான் வழங்கியிருக்கவில்லையென தெரிவித்துள்ள சீ.வி.கே.சிவஞானம் அவை அல்பிரட் துரையப்பாவே வழங்கியிருந்ததாக தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் தமிழாராய்ச்சி மாநாட்டிற்கு இட ஓதுக்கீடு அனுமதி கோரச்சென்றிருந்த போது முதல்வராக இருந்த அல்பிரட் துரையப்பா தனது ஆலோசகராக இருந்த சிவஞானத்தை அழைத்து ஆலோசனை பெற்ற பின்னரே அனுமதி மறுத்திருந்தமையினை மறவன்புலோ சச்சிதானந்தன் நினைவு கூர்ந்துள்ளார். இதன் மூலம் அவர் எவ்வளவு அல்பிரட் துரையப்பாவிற்கு நெருக்கமாக இருந்தார் என்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்நிலையினில்   தமிழாராய்ச்சி மாநாட்டு படுகொலைகள் அரங்கேற்றப்பட்டதனை நினைவு கூர்ந்ததுடன் அல்பிரட் துரையப்பா படுகொலை செய்யப்பட்ட பின்னர் அவரது ஆதரவாளர்களில் பலருக்கு சீ.வி.கே.சிவஞானம் அடைக்கலம் கொடுத்து பாதுகாத்து வந்திருந்ததாக சொல்லப்படுகின்றது.

No comments