படையினரால் தண்ணீர் பஞ்சம்!

திருநெல்வேலி சிவன் ஆலய கிணற்றுனை குடிநீருக்காக நூற்றிற்கும் மேற்பட்ட குடும்பங்கள் நம்பியுள்ள நிலையில் நாவாந்துறையில் உள்ள இராணுவத்தினர் தினமும் நீர்த்தாங்கி மூலம் குறித்த குணற்றில் இருந்து நீரை உறுஞ்சுவதாக தமிழரசுக்கட்சி சார்பு யாழ்.மாநகரசபை உறுப்பினர் ஒருவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

யாழ்ப்பாணம் மாநகர சபை எல்லைப் பகுதியில் உள்ள திருநெல்வேலி சிவன் ஆலயத்தின் பாவனைக் கிணறானது ஆலயப் பாவனைக்கு மட்டுமன்றி அயல் கிராமத்தவர்களின் குடிநீராகவும் விளங்குகின்றது. இவ்வாறு கானப்படும் குடிநீர்க் கிணற்றில் இருந்து நாவாந்துறையில் உள்ள இராணுவ முகாமைச் சேர்ந்த படைச் சிப்பாய்களின் பாவனைக்காக தினமும் நீர் உறுஞ்சப்படுகின்றது.

இதன் காரணமாக மக்களின் பாவனைக்கான நீர்த் தட்டுப்பாடு ஏற்படுவதற்கு முன்பாக இராணுவத்தினர் தமக்கான குடிநீரை பிற பகுதியில் இருந்து பெறுவதற்கு அல்லது மாற்று வழியை நாடுவதற்கு முன் வர வேண்டுமென அவர் கோரிக்கை முன்வைத்துள்ளார்.

எனினும் இக்கோரிக்கை யாழ்.மாநகரசபையிலா அல்லது படைத்தரப்பிடமா முன்வைக்கப்பட்டுள்ளதென தெரியவரவில்லை.

No comments