நெதர்லாந்தில் நடைபெற்ற நாட்டுப்பற்றாளர் நாள்

தியாக தீபம் அன்னைபூபதி அம்மாவின் 30ம்ஆண்டு நினைவு எழுச்சிநாளும், ஆனந்தபுரத்தில் வீரகாவியமான வீரமறவர்களின் 9ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வும் நெதர்லாந்து.

22-04-18 ஞாயிற்றுக்கிழமை அன்று நெதர்லாந்தில் almere என்ற நகரில் தியாகதீபம் அன்னை பூபதியம்மாவின் நினைவெழுச்சி நாளும் அத்துடன் ஆனந்தபுரத்தில் வீரகாவியமான வீரமறவர்களான பிரிகேடியர் தீபன் , பிரிகேடியர் துர்க்கா , பிரிகேடியர் விதுசா, பிரிகேடியர் கடாபி, பிரிகேடியர் மணிவண்ணன் , கேணல் நாகேஷ் ஆகியோரின் 9ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வும் அத்துடன் மாவீரர்களான கேணல் தமிழ்செல்வி , லெப் கேணல் ஜொனி, லெப் கேணல் கலைஅழகன் ஆகியோரின் நினைவேந்தல் நிகழ்வுகளும் மிக உணர்வெழுச்சியுடன் நினைவுகூறப்பட்டது.

இந்நிகழ்வில் வழமைபோல் பொதுச்சுடர் ஏற்றலுடன் தமிழீழ தேசியக்கொடியும் ஏற்றிவைக்கப்பட்டது.அத்துடன் நெதர்லாந்து தமிழமுதம் இசைக்குழுவின் எழுச்சிக்கானங்களும் இசைக்கப்பட்டது.
  
நிகழ்வின் இறுதியாக நம்புங்கள் தமிழீழம் பாடலைத்தொடர்ந்து தமிழீழ தேசியக்கொடி கையிறக்களுடன் தமிழர்களின் தாகம் தமிழீழத்தாயகம் என்ற தாரகமந்திரத்துடன் நிகழ்வுகள் யாவும் இனிதே நிறைவெய்தின.  

No comments