காணி துப்பரவின் போது வெளிப்பட்ட விடுதலைப் புலிகளின் நிழக்கீழ் அறை?

பளை, அர­சர்­கே­ணி­யில் நிலக்­கீழ் பதுங்கு குழி ஒன்று நேற்­றுக் கண்­டு­பி­டிக்­கப்­பட்­டது. காணி­யின் உரிமை­யா­ளர் நேற்­றுக் காணி­யைத் துப்­பு­ரவு செய்­த­போதே நிலக்­கீழ் பதுங்­குழி தென்­பட்­டது.

இந்­தப் பதுங்கு குழி தமி­ழீழ விடு­த­லைப் புலி­கள் அமைப்­பால் பயன்­ப­டுத்­தப்­பட்­டது என்று நம்பப்படுகின்றது. பதுங்கு குழி இருப்­பது தொடர்­பில் இரா­ணு­வத்­தி­ன­ருக்­குத் தெரி­விக்­கப்­பட்­டது. அவர்­கள் அந்தப் பகு­திக்­குச் சென்று ஆய்­வு­களை மேற்­கொண்­ட­னர்.

பதுங்கு குழியை அகற்ற நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­டும் என்று தெரி­வித்த இரா­ணு­வத்­தி­னர், அது­வரை காணி­யில் எந்த நட­வ­டிக்­கை­யை­யும் மேற்­கொள்ள வேண்­டாம் என்று காணி­யின் உரி­மை­யா­ள­ருக்கு அறிவு­றுத்­தி­யுள்­ள­னர்.

அங்கு சென்ற பச்­சி­லைப்­பள்ளி பிர­தேச சபை உறுப்­பி­னர் க.துர்­சோ­த­னன் பதுங்­கு­ழியை முழு­மை­யாக அழிக்க வேண்­டாம் என்று இரா­ணு­வத்­தி­ன­ரி­டம் கோரிக்கை விடுத்­துள்­ளார்.

அதன் அடிப்­பா­கம் பெட்டி வடி­வில் இருப்­ப­தால் அதைத் துப்­பு­ரவு செய்­து­த­ரும் பட்­சத்­தில் தேங்­காய் மட்டை­களை ஊற­வைத்­துத் துப்பு உற்­பத்தி செய்­யப் பயன்­ப­டுத்த முடி­யும் என்று அவர் கோரி­யுள்­ளார். அவரின் கோரிக்­கைக்கு இரா­ணு­வத்­தி­னர் சாத­க­மா­கப் பதி­ல­ளித்­த­னர் என்று தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

No comments