அமெரிக்க உளவு விமானங்களை செயலிழக்கச் செய்ய புதிய கருவிகளைப் பொருத்தியது ரஷ்யா!


சிரியா விடயத்தில் அமெரிக்காவுக்கும் ரஷியாவுக்கும் மோதல் வலுத்துவரும் நிலையில் சிரியா வான் எல்லைக்குள் நுழையும் அமெரிக்க உளவு விமானங்களை ஸ்தம்பிக்க வைக்கும் கருவிகளை ரஷியா அமைத்துள்ளதாக ஐரோப்பிய செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

டவுமா நகரில் ரசாயன தாக்குதல் நடந்ததாக கூறப்படும் பகுதிகளையும், வேறு சில இடங்களையும் அமெரிக்க உளவு விமானங்கள் வேவு பார்க்காமல் இருப்பதற்காக இந்த ஆளில்லா விமானங்களை இயக்கும் ஜி.பி.எஸ். அலைக்கற்றை வீச்சு அப்பகுதிகளில் ஊடுருவ முடியாத வகையில் ‘ஜாம்மர்ஸ்’ என்னும் தடுப்பு கருவிகளை ரஷியா பொருத்தி இருப்பதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செயற்கைகோளில் இருந்து வெளியாகும் ஜி.பி.எஸ். அலைக்கற்றை வீச்சு தடைபட்டால் தரையில் இருக்கும் கட்டுப்பாட்டு அறை பகுதியில் இருந்து பிறப்பிக்கப்படும் கட்டளைகளுக்கு ஏற்ப ஆளில்லா உளவு விமானங்கள் செயல்பட முடியாமல் போகும்.

மேலும், இப்படி கட்டுப்பாடுகளை இழந்து பறக்கும் உளவு விமானங்கள் ஒன்றோடொன்று மோதி விபத்துக்குள்ளாகும் ஆபத்தும் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்னர் கிழக்கு உக்ரைனில் இருந்து கிரிமியா பகுதியை பிரிக்க நடந்த போரில் பங்கேற்றிருந்த ரஷியா இதுபோன்ற தடுப்பு கருவிகளை பயன்படுத்தியதையும் அந்த செய்தி சுட்டிக்காட்டுகிறது.

No comments