இளைய சமூகத்தினை முன்னிறுத்தி புதிய அரசியல் களம்!

இளைய சமூகத்தினை கட்டியெழுப்புவதன் ஊடாக புதிய அரசியல் கலாச்சாரமொன்றை ஆரம்பிக்க வடக்கு முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் ஆர்வங்கொண்டுள்ளார்.

இதன் ஆரம்ப கட்டமாக தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில் மாபெரும் இளைஞர் மாநாடு ஒன்று மிக விரைவில் நடைபெறவுள்ளதாக பேரவையின் முக்கிய செயற்பாட்டாளர் ஒருவர் தகவல் வெளியிட்டுள்ளார்.

வடமாகாணத்து இளைஞர்களை  முதன்மைப்படுத்தி யாழ்ப்பாணத்தில் இளைஞர் மாநாடு ஒன்றை நடத்துவதற்கான விசேட செய லணி ஒன்றும் தமிழ் மக்கள் பேரவையால் உருவாக்கப்பட்டுள்ளது.

ஊழல் அற்ற அரசியல் என்ற தொனிப்பொருளில் தமிழ் இளை ஞர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் நடைபெறும் இளைஞர் மாநாட்டில் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் இளைஞர்களை திசைமுகப் படுத்தும் விசேட உரையயான்றை ஆற்றவுள்ளார்.

தமிழ் இளைஞர்கள் மத்தியில் ஒரு புதிய சிந்தனையை ஏற்படுத்தி  அதன் ஊடாக வேலைவாய்ப்பு, பொருளாதார முன்னேற்றம், தமிழ் பண்பாடு மற்றும் கலை, கலாசார விழுமியங்கள் என அனைத்து தளங்களிலும் இளைஞர்களின் கவனத்தை ஈர்ப்பதற்கான அத்தனை ஏற்பாடுகளும் திட்டமிட்டு வருவதாக பேரவை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேபோல வடக்கை தொடர்;ந்து கிழக்கு மாகாணத்திலும் இளைஞர் மாநாட்டை நடத்துவதற்கான முத்தாய்ப்புப் பணிகள் முன்னெடுக்கப்படும் என்றும் பேரவைத்தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments