கிடப்பில் போடப்பட்டதா நெல்சிப் ஊழல் அறிக்கை?

சர்சைகளை தோற்றுவித்துள்ளதும் வடக்கில் இடம்பெற்ற பாரிய மோசடியென வர்ணிக்கப்பட்டதுமான நெல்சிப் விசாரணை அறிக்கை அரைகுறையில் தொடர்நடவடிக்கை ஏதுமின்றி கைவிடப்பட்டுள்ளமை அம்பலமாகியுள்ளது.

வடமாகாணசபை தீர்மானப்பிரகாரம் நியிமிக்கப்பட்ட ஓய்வு பெற்ற அதிகிhரிகளைக்கொண்ட குழுவொன்று ஆரம்ப நிதி விசாரணைகளை மேற்கொண்டு மோசடி நடந்ததை உறுதிப்படுத்தியிருந்தது.அதன் அறிக்கை கடந்த ஆண்டின் ஜீன் மாதம் கையளிக்கப்பட்டிருந்த போதும் ஓராண்டு கடந்தும் தொடர்நடவடிக்கை ஏதும் எடுக்கப்படாது முடக்கி வைக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

இதனிடையே விசாரணை மேற்கொண்ட குழுவிற்கு மில்லியன்களில் கொடுப்பனவுகள் வழங்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்ற போதும் இது வரை அக்குழு எவர் மீதும் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்படவில்லை.குழுவின் விசாரணை அதிகாரிகள் எவரையும் குற்றஞ்சாட்டி குற்றப்பத்திரங்களை சமர்ப்பிக்கவில்லையென தெரியவருகின்றது.

வடமாகாண அமைச்சர்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டுக்கள் முன்னிறுத்தப்பட்டு விசாரணைகள் நடத்தப்பட்டு அவர்கள் பதவியினை துறக்கவேண்டியுமேற்பட்டிருந்தது.தற்போதும் அது தொடர்வதுடன் தற்போதுள்ள அமைச்சர்கள் மீதும் தமிழரசுக்கட்சியின் ஆதரவாளர்கள் குற்றச்சாட்டுக்களிi முன்வைத்து பிரச்சாரங்களை ஆரம்பித்துள்ளனர்.
எனினும் வடமாகாணசபையின் மூத்த அதிகாரிகள் பலரும் சிக்குண்டுள்ள நெல்சிப் ஊழலை ஊத்தி மூடிவிட ஒருபுறம் அதிகார மட்டம் பாடுபட்டுவருகின்றது.மறுபுறம் இவர்களை பாதுகாப்பதில் அவை தலைவர் உள்ளிட்ட தமிழரசின் சிலர் பாடுபட்டும் வருகின்றனர்.

மறுபுறம் நெல்சிப் விசாரணை அறிக்கை கையளிக்கப்பட்டு ஓராண்டு கடந்துள்ள நிலையில் வடமாகாணசபையில் வினைத்திறனற்ற முதலமைச்சர் எனும் பிரச்சாரத்தையும் ஒதுக்கப்பட்ட நிதி திரும்பி செல்கின்றதென்ற பிரச்சாரத்தையும் ஊழல் அதிகாரிகளை காப்பாற்றும் தரப்புக்களே முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 

No comments