நம்பிக்கையில்லா தீர்மானம் தொடர்பில் இன்று முக்கிய கலந்துரையாடல்கள்


பிரதமருக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லா தீர்மானம் தெடர்பில் தீர்மானம் மேற்கொள்ளும் சில கலந்துரையாடல்கள் இன்று இடம்பெறவுள்ளன.

இதற்கமைய ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையிலான கலந்துரையாடலொன்று இடம்பெறவுள்ளது.

பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் பிற்பகல் 3.00 மணியளவில் அலரிமாளிகையில் இந்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.

அத்துடன், ஐக்கிய தேசிய கட்சியின் சில உறுப்பினர்கள் கூடி நேற்றைய தினம் கலந்துரையாடல் ஒன்றை நடத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனிடையே, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் இன்று பிரதமர் ரணில் விக்கரமசிங்கவை சந்தித்து கலந்துரையாடல்களை நடத்தவுள்ளது.

இந்த சந்திப்பு நேற்று இடம்பெறவிருந்த நிலையில், அது இன்று வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனுடன் எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தனின் தலைமையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு இன்று கூடவுள்ளது.

இதன்போது நம்பிக்கையில்லா தீர்மானம் தொடர்பான இறுதி தீர்மானம் எடுக்கப்படவுள்ளதாக கட்சியின் உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன

No comments