சிங்கள அரச அதிபரை காப்பாற்றும் கூட்டமைப்பு தலைமை!

வவுனியா மாவட்ட அரச அதிபராக சிங்களவர் ஒருவர் நியமிக்கப்பட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமையும் வன்னி நாடாளுமன்ற உறுப்பினர்களுமே காரணமென வடக்கு மாகாண சபை உறுப்பினர் ஜி.ரி.லிங்கநாதன் தெரிவித்துள்ளார்.



வவுனியா மாவட்டச் செயலரின் சில செயற்பாடுகள் எமக்கு திருப்தியளிப்பதாக இல்லை. புதுவருட கொண்டாட்டத்தில் கூட இராணுவம் மற்றும் முப்படையினரை முன்னிலைப்படுத்தி  மேற்கொண்டமையானது அவர் பௌத்த சிங்கள சிந்தனையில் இருக்கிறார் என்பதை பார்க்கக் கூடியதாகவுள்ளது. 


அத்துடன் இவ்விடயத்தில் எமது வன்னி  நாடாளுமன்ற உறுப்பினர்களும் கூட்டமைப்பின் தலைமையும்  சரியாக செயற்பட்டிருந்தால்  இங்கு ஒரு சிங்கள மாவட்டச்செயலர் நியமிக்கப்பட்டிருக்க மாட்டார். இப்பொழுது வேண்டுமானாலும் கூட எமது வன்னி நாடாளுமன்ற உறுப்பினர்களும்  தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைமையும் வினைத்திறனுடன் இதயசுத்தியுடன் அரசுக்கு ஒரு அழுத்தத்தை கொடுத்தால் தமிழர் ஒருவரை மாவட்டச் செயலராக மாற்றக்கூடிய வாய்ப்புக்கள் இருக்கின்றனவென அவர் தெரிவித்துள்ளார்.


இதேவேளை அண்மையில் மாவட்ட செயலகத்தில் விகாரை ஒன்றை அமைக்க முற்பட்டு அரச அதிபர் சர்ச்சைகளில் சிங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.

No comments