எலும்புக்கூடாக விடுவிக்கப்பட்ட ஞானோதய வித்தியாலயம்!



உயர்பாதுகாப்பு வலயத்தில் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த கட்டுவன் ஞானோதய வித்தியாலயம் 28 வருடங்களின் பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளது.
வலிகாமம் வடக்கில் இன்று விடுவிக்கப்பட்ட 683 ஏக்கர் காணியில் தென்மயிலையில் (ஜே-240) உள்ள கட்டுவன் ஞானோதய வித்தியாலயம் விடுவிக்கப்பட்டுள்ள.முற்றாக இடிந்து  அழிந்த நிலையில் பற்றைகள் சூழ்ந்து பாடசாலைக்கான தடயமேயின்றி சூழல் காணப்பட்டது.

1922ஆம் ஆண்டு தொடக்கப்பெற்ற இக்கிராமத்து பாலர் ஞானோதய சங்கம் வர்த்தகர் க.கந்தையா என்பவரது துணையோடு ஞானோதய வித்தியாலயத்தை நிறுவியது.


ஆரம்பத்தில் கட்டுவன் சந்தியில் அமைந்திருந்த இப் பாடசாலை 1964ம் ஆண்டினில் மயிலிட்டி தெற்கில் அமைந்திருந்த விளைபொருள் உற்பத்தி விற்பனைச் சங்கத்துக்கு உரித்தான கட்டிடத்துக்கு இடம் பெயர்ந்தது.
1990 மக்களது இடப்பெயர்வின் பின்னர் இராணுவ வசம் சென்றிருந்த பாடசாலை சூறையாடப்பட்டு தற்போது விடுவிக்கப்பட்டுள்ளது.

No comments