கரவெட்டியில் அள்ளிவீசிய கூட்டமைப்பு, சுதந்திரக்கட்சி!

கரவெட்டி பிரதேசசபையில் சிறீலங்கா சுதந்திரக்கட்சியை வெற்றி பெறவைக்க பணம் வாங்கிய கூட்டமைப்பு உறுப்பினர்கள் கடைசி நேரத்தில் கைவிட்டுவிட்டதாக இராமநாதன் தனது ஆதரவாளர்களிடம் கவலை தெரிவித்துள்ளார்.

கரவெட்டி பிரதேசசபையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினரான ஐங்கரன் தவிசாளராக தெரிவாகியுள்ளார். உபதவிசாளராக தமிழ் தேசிய கூட்டமைப்பின் பொன்னையா தெரிவாகியுள்ளார்.


பெரும் விலைகொடுத்து உறுப்பினர்களை வாங்கி, தவிசாளர் பதவியை பெற்றுவிட, சுதந்திரக்கட்சி ஒருபுறம் போராட மறுபுறம் கூட்டமைப்பில் தெரிவாகியுள்ள ஜங்கரனும் பாடுபட்டிருந்தார்.அவர் கட்சி தலைமையினை தாண்டி ஏற்கனவே சுமார் இரண்டரை கோடி வரையில் பிரச்சார காலத்தில் செலவு செய்திருந்தார்.தற்;போது தவிசாளர் பதவியை கைப்பற்ற மீண்டும் அதேயளவு பணத்தை அள்ளி வீசியிருந்தார்.கூட்டமைப்பின் முன்னாள் தவிசாளர் வியாகேசு தரப்பின் ஆதரவை பெற ஒருபுறமும் மறுபுறம் ஏனைய கட்சிகளது உறுப்பினர்களை வளைத்துப்போடுவதிலும் முனைப்பு காட்டியிருந்தார்.
இன்றைய கூட்டத்தின் ஆரம்பத்தில் இரகசிய வாக்கெடுப்பா, பகிரங்க வாக்கெடுப்பா என்பது தீர்மானிக்க நடத்தப்பட்ட வாக்கெடுப்பில், சுதந்திரக்கட்சி மற்றும் ஈ.பி.டி.பி என்பன இரகசிய வாக்கெடுப்பை கோரின. பத்து உறுப்பினர்கள் இதை ஆதரித்தனர்.

இந்த சமயத்தில் கூட்டமைப்பினரில் தனக்காக வாக்களிக்க சம்மதித்தவர்களது ஆதரவை பெற இராமநாதன இரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டுமென அடம்பிடித்தார். எனினும், சட்டத்தில் இல்லாத ஒரு நடைமுறையை செயற்படுத்த முடியாதென உள்ளூராட்சி ஆணையாளர் அறிவித்தார். இதை எதிர்த்து நீதிமன்றத்திற்கு போகவுள்ளதாக இராமநாதன் கூற, அது உங்கள் உரிமை, என கூறி உள்ளுராட்சி ஆணையாளர், வாக்கெடுப்பை ஆரம்பித்தார்.

இந்நிலையில் பகிரங்க வாக்கெடுப்பென வந்தததும் கூட்டமைப்பினர் ஒருபுறம் பொத்திக்கொண்டு வாக்களிக்க இராமநாதனின் கனவு பொய்த்துப்போயுள்ளது.

இதனிடையே உபதவிசாளராக பொன்னையா போட்டியின்றி தெரிவாகியுள்ளார்.

No comments