சிரியாவிலுள்ள ஈரான் விமானப் படையினர் மீது தாக்குதல் நடாத்தப் போவதாக இஸ்ரேல்


அண்டை நாடான சிரியாவில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ஈரான் விமானப் படையினர் மீது தாக்குதல் நடாத்தப் போவதாக இஸ்ரேல் அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சிரியா ஜனாதிபதி பசீர் அல் அஸாதின் அரசாங்கத்துக்கும் இராணுவத்துக்கும் ஆதரவு வழங்குவதற்காக ரஷ்யாவுடன் ஈரானும் முன்வந்துள்ளது. ஈரான் சிரியாவின் பிரச்சினையில் தலையிட்டமை சவுதிக்கும், இஸ்ரேல் உட்பட பிராந்திய நாடுகள் பலவற்றுக்கும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளதாக சர்வதேச அரசியல் ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். சிரியாவுக்கு பயணிக்கும் ஈரான் பயணிகள் விமானத்திலும் ஆயுதங்கள் எடுத்துச் செல்லப்படுவதாக இஸ்ரேல் குற்றம்சாட்டியுள்ளது. எக்காரணத்துக்காகவாவது இஸ்ரேல் ஈரான் விமானப் படையினர் மீது தாக்குதல் நடாத்துமாயின் சிரியா நெருக்கடி நிலை மாத்திரமன்றி, மத்திய கிழக்கு பிராந்திய நாடுகளிடையேயும் நெருக்கடி நிலைமை உருவாகும் எனவும் சர்வதேச உறவுகள் தொடர்பான ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். ஏப்றல் மாதம் முதல் வாரத்தில் சிரியாவின் எல்லைப் பகுதியில் அமைந்துள்ள விமானப் படையினர் மீது விமானத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதில் 7 ஈரான் படையினர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு ரஷ்யாவும், சிரியாவும் இஸ்ரேல் மீதே குற்றம்சாட்டின. இருப்பினும், இஸ்ரேல் இந்த குற்றச்சாட்டை மறுக்கவில்லை. அத்துடன், இந்த தாக்குதலுக்கு எந்தவொரு குழுவும் இதுவரை பொறுப்பேற்கவும் இல்லையென தெரிவிக்கப்படுகின்றது

No comments