காணி விடுவிப்பு:இராணுவ கொலனியாக்கமே!


வலி.வடக்கில் படைத்தரப்பு முன்னெடுக்கும் காணி விடுவிப்பு திட்டமிட்ட இராணுவ கொலனியாக்கத்தின் ஒரு அங்கமேயென உறுதியாகியுள்ளது.ஆக்கிரமிக்கப்பட்டுள்ள காணிகளில் முன்புறமுள்ள காணிகளை தொடர்ந்தும் தடுத்து தமது வசம் வைத்துள்ள படைத்தரப்பு மறுபுறம் பின்புறமாக போதிய போக்குவரத்து தொடர்புகளற்ற பகுதிகளையே விடுவித்துவருகின்றது.

அவ்வகையில் மூன்று கிராம சேவையாளர் பிரிவில் 680 ஏக்கர் காணி எதிர்வரும் 13 ஆம் விடுவிக்கப்படவுள்ளது. அதற்கான நிகழ்வு ஒழுங்கமைப்பில் இராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர்.

மயிலிட்டி அம்மன் கோயிலுக்கு அருகில் உள்ள மைதான காணியில் முற்பகல் 10 மணிக்கு காணி விடுவிப்புநிகழ்வு நடைபெறவுள்ளது. அதில் இராணுவத்தளபதி மகேஸ் சேனநாயக்கவும் பங்கேற்பார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

அண்மையில் காங்கேசன்துறை நல்லிணக்கபுரத்தில் நடைபெற்ற நிகழ்வில் உரையாற்றிய மகேஸ் சேனநாயக்க மீண்டும் போராட்ட சிந்தனை ஏற்பட்டால் விடுவித்த காணிகளை பறிப்பதற்கு இராணுவம் பின்னிற்காதென தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments