கறுப்புக்கொடி.. முற்றுகை.. கைது.. பிரதமர் மோடியின் சென்னை வருகைக்கு எதிராக வலுக்கும் போராட்டங்கள்


2018 ராணுவக் கண்காட்சியை முறைப்படி தொடங்கி வைக்க பிரதமர் மோடி டெல்லியிலிருந்து தனிவிமானம் மூலம் சென்னைக்கு புறப்பட்டார். இதனைத் தொடர்ந்து காலை 9.20 மணிக்கு சென்னை வரும் பிரதமர் மோடி அங்கிருந்து ஹெலிகாப்டரில் மாமல்லபுரம் செல்கிறார். மாமல்லபுரத்திலிருந்து சாலை மார்க்கமாக திருவிடந்தை ராணுவ தளவாட கண்காட்சிக்கு காலை 10 மணிக்கு செல்கிறார் . கருப்புச் சட்டையுடன் ஸ்டாலின். கருப்புச் சட்டை அணிந்து மு.க. ஸ்டாலின் காவிரி மீட்பு பயணம் மேற்கொண்டுள்ளார். நாகை மாவட்டம் வைத்தீஸ்வரன் கோயிலில் அனைத்துக் கட்சி தலைவர்களுடன் பயம் மேற்கொண்டுள்ளார். ஸ்டாலினுடன் பயணம் செல்லும் தலைவர்கள், தொண்டர்கள் கருப்புச் சட்டாய் அணிந்துள்ளனர். கறுப்புக்கொடி ஏற்றம் காவிரி வாரியம் அமைக்காத பிரதமரின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு இடங்களில் கருப்புக்கொடி ஏற்றப்பட்டது.கோபாலபுரத்தில் உள்ள திமுக தலைவர் கருணாநிதியின் வீட்டிலும் கருப்புக்கொடி ஏற்றப்பட்டது.திமுகவின் தலைமையகமான சென்னை அண்ணா அறிவாலயத்தில் கருப்புக்கொடி ஏற்றப்பட்டது.சென்னை ஆழ்வார்பேட்டை சித்தரஞ்சன் சாலையில் உள்ள திமுக செயல் தலைவர் ஸ்டாலின் வீட்டில் கருப்புக் கொடி ஏற்றப்பட்டுள்ளது.. பிரதமருக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று சென்னையில் கருப்புக்கொடி போராட்டத்தில் பங்கேற்க உள்ள மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வீட்டில் கருப்புக் கொடி ஏற்றப்பட்டது. சென்னை, திருச்சி, திருவெறும்பூர், ஸ்ரீவில்லிபுத்தூர், நாகை, திருவாரூரில் உள்ள வீடுகள், பேருந்து நிலையம், அலுவலகங்களில் கருப்புக்கொடி ஏற்றி எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.பிரதமர் மோடி தமிழக வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து திருச்சி காஜா பேட்டை பகுதிகளிலுள்ள வீடுகளில் கருப்புக்கொடி யேற்றியுள்ளனர். போராட்டம் .... பிரதமர் மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக மகளிரணி செயலாளர் கனிமொழி சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகே கருப்புக்கொடி ஏற்றி போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. பிரதமர் மோடி சென்னை வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை பெரியார் திடல் மற்றும் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி இல்லத்தில் கருப்புக்கொடி ஏற்றி போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.சென்னை ஆலந்தூர் ரயில் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். தமிழக வாழ்வுரிமை கட்சியினர் போராட்டம் நடத்தி வருவதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பிரதமர் மோடியின் வருகையை கண்டித்து சென்னை விமான நிலையத்தை முற்றுகையிட்டு தமிழக வாழ்வுரிமை கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். பிரதமர் மோடியின் வருகையை கண்டித்து சென்னை விமான நிலையம் எதிரே தமிமுன் அன்சாரி போராட்டம் நடத்தி வருகிறார். கைது... பிரதமர் மோடி வருகையை அடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் அன்பு தென்னரசு உட்பட 25 பேர் கைது செய்யப்பட்டனர். பிரதமர் மோடி தமிழக வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து சிவகாசி தபால் நிலையம் அருகே உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் கருப்புக்கொடி ஏற்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 20 பேர் கைது செய்யப்பட்டனர். பிரதமர் மோடியின் வருகையை கண்டித்து விமான நிலையம் எதிரே மைதானத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட தமிமுன் அன்சாரி, தனியரசு, மணியரசன் கைது செய்யப்பட்டனர். சென்னை விமான நிலையத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட பாரதிராஜா, அமீர், ராம், வெற்றிமாறன், கவுதமன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.

No comments