நாடகங்கள் அரங்கேறும் நேரமிது?



எந்த சிறீலங்கா சுதந்திரக்கட்சியின் யாழ்.மாவட்ட பிரதிநிதியான இருந்த துரோகி அல்பிரட் துரையப்பாவினை கொலை செய்ய முயன்று பொன்.சிவகுமாரன் மரணத்தை தழுவிக்கொண்டாரோ அதே கட்சியினது ஆதரவுடன் கதிரையேறி சிவகுமாரனிற்கு அஞ்சலித்துள்ளன கூட்டமைப்பின் தொண்டரடிப்பொடிகள் சில. 

வுலிகாமம் கிழக்கு பிரதேசசபையின் தவிசாளர் தேர்வுக்காக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தியாகராசா நிரோஸையும் தமிழ்த்  தேசிய மக்கள் முன்னணி சண்முகராஜா சிறீமரனையும் இன்று பிரேரித்திருந்தன.

தமிழர் விடுதலைக் கூட்டணியின் 3 உறுப்பினர்கள் நடுநிலை வகித்தனர். இந்நிலையில், பகிரங்க வாக்கெடுப்பு நடத்தப்பட்டபோது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 15 உறுப்பினர்களும் ஈபிடிபியின் 6 உறுப்பினர்களும் சிறீPலங்கா சுதந்திரக் கட்சியின் 03 உறுப்பினர்களுமாக 24 உறுப்பினர்கள், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளரான தியாகராசா நிரோஸிற்கு ஆதரவாக வாக்களித்து அவரை வெல்ல வைத்திருந்தன.

இந்நிலையில் பதவியேற்றபின்னர் அரங்கேற்றப்படும் நாடகங்களின் அங்கமாக கூட்டமைப்பின் வலிகிழக்கு பிரதேச சபை தவிசாளர் தியாகராசா நிரோஸ் உரும்பிராயிலுள்ள பொன் சிவகுமாரனின் தூபி பகுதியில் செல்பி எடுத்துக்கொண்டார்.

இதே வேளை மற்றொரு நாடகத்தை நல்லூர் பின்வீதியில் மாநகர முதல்வர் ஆனோல்ட் அரங்கேற்றியிருந்தார்.


நல்லூர் கந்தசுவாமி ஆலய சூழலுடன் அமைந்துள்ள திலீபனின் நினைவுத் தூபியை புனரமைப்பது தொடர்பாக யாழ்ப்பாணம் மாநகர முதல்வர் இ.ஆனோல்ட் இன்று ஆராய்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நல்லூர் பகுதியில் அமைந்துள்ள திலீபனின் நினைவுத்தூபி, இலங்கை இராணுவத்தினரால் அழிக்கப்பட்டது. 

இந்த நிலையில் பழைய வடிவில் 23 அடி உயரத்தில் அனைவரும் புனிதம் பேணும் வகையில் திலீபனின் தூபி அமைக்கப்படும்.  எதிர்வரும் செப்ரெம்பர் மாதம் திலீபனின் நினைவு வாரத்தில் புதிய தூபியைத் திறக்கும் வகையில் பணிகளை முன்னெடுக்கப்படும் என யாழ். மாநகர சபை முதல்வர்; தெரிவித்துள்ளதாக கூட்டமைப்பில் இணைந்துள்ள ஜனநாயகப்போராளிகள் புளங்காகிதம் அடைந்துள்ளனர்.

கடந்த ஆண்டினில் திலீபனின் நினைவேந்தல் தினத்தன்று களியாட்ட நிகழ்வுகளை ஆனோல்ட் தூபி பகுதியில் அரங்கேற்றி மக்களது சீற்றத்திற்குள்ளாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments