முடிவுக்கு வந்தது அரசியல் கைதி போராட்டம்?


அநுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதியான யாழ்ப்பாணம் சுண்ணாகத்தினை சேர்ந்த இராசபல்லவன் தவறூபன் கடந்த இரு வாரங்களாக முன்னெடுத்த உண்ணாவிரதப் போராட்டத்தினை முடிவுக்கு கொண்டுவந்துள்ளார்.
இவர் இரவு நேரங்களில் ஏனைய கைதிகளிலிருந்து தனிமைப்படுத்தப்பட்டு; தனியான ஒரு அறையில் அடைத்து வைக்கப்படுவதாகவும் மாலை 5 மணியிலிருந்து காலை 6 மணிவரை இவ்வாறு தனியறையில் தினமும் அடைத்து வைக்கப்படுவதாக தெரிவித்து இவ் உண்ணாவிரதத்தினை மேற்கொண்டிருந்தார்.
இன்றையதினம் அநுராதபுரம் சிறைச்சாலைக்கு சென்ற செயற்பாட்டாளர் கணேஸ் வேலாயுதம் குறித்த அரசியல் கைதியினை நேரில் சந்தித்து கலந்துரையாடியிருந்தார்.
அதன்பொழுது தான் யாழ்ப்பாணம் சிறைச்சாலைக்கு அழைத்து செல்லும் போது அங்கிருந்து தப்பி செல்வதற்கு வாய்ப்பு இருப்பதாக சிறைச்சாலை அதிகாரிகளுக்கு வழங்கப்பட்ட தகவலை தொடர்ந்து தான் இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டு அடைத்து வைக்கப்பட்டிருப்பதாக குறிப்பிட்டிருந்தார்.
இது தொடர்பில் சிறைச்சாலை பிரதிப் பொலிஸ் அதிகாரியுடன் கலந்துரையாடிய போது தமக்கு இதுதொடர்பில் தவறான தகவல் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் அவர் தப்பி செல்வதற்கான வாய்ப்புக்கள் இல்லாத காரணத்தாலும் அவரை ஏனைய கைதிகளுடன் இணைத்து தங்கவைப்பதற்கு நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
அதனை தொடர்ந்து இ.தவறூபனின் கோரிக்கையினை சிறைச்சாலை அத்தியட்சகர்; நிறைவேற்றுவதாக குறிப்பிடப்பட்டதற்கு இணங்க தவறூபன்; உண்ணாவிரதத்தினை முடிவுக்கு கொண்டு வந்துள்ளதாக கணேஸ் வேலாயுதம் தெரிவித்தார்.
அவருக்கு தேவையான உலர் உணவுப்பொருட்கள் பழவகைககள் குடிபானங்கள் என்பவற்றையும் அவரிடம் வழங்கி வைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

No comments