மு. களஞ்சியத்தின் மீது தமிழக காவல் துறை தடியடி!

 உச்ச நீதிமன்றம் விதித்த மூன்று வார காலக்கெடு முடிந்த 30.3.2018 அன்று முதல் தொடர் போராட்டம் தமிழ்நாட்டில் உணர்வெழுச்சியை ஏற்படுத்தியுள்ளது. மீண்டும் மீண்டும் உச்ச நீதிமன்றம் தமிழருக்கு அநீதியை இழைத்து, மேலாண்மை வாரியம் அமைக்கும் தீர்வை தள்ளிக் கொண்டே போகிற நிலையில் தமிழ்நாட்டில் மேலும் விரிவடைந்து வருகிறது காவிரிக்கான போராட்டம்

காவிரி மேலாண்மை அமைக்கக் கோரும் இப்போராட்டம் தமிழகம் தழுவி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கட்சி வேறுபாடின்றி தமிழர்கள் அனைவரும் போராடி வருகின்றனர் .தமிழ்நாடு பெரும் கொந்தளிப்பில் காவிரி உரிமைக்கான தனது குரலை வெளிப்படுத்துகிறது.



உச்ச நீதிமன்ற உத்தரவுபடி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து, தமிழக அரசியல் கட்சிகள், விவசாயச் சங்கங்கள்,வணிகர் சங்கங்கள், மாணவர்கள், திரைத்துறையினர் என்று பல்வேறு தரப்பினர் போராடி வருகிறார்கள். 'உண்ணாவிரதம், கடையடைப்பு, வழக்கறிஞர்களின் நீதிமன்றப் புறக்கணிப்பு, மத்திய அரசு அலுவலகங்களுக்கு பூட்டு போடும் போராட்டம், கவர்னர் மாளிகை முற்றுகை...'  விமான நிலையம் முற்றுகை, மோடிக்கு எதிரான கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் என தமிழர்கள் உணர்வெழுச்சியில் போராடிவருகின்றனர்.  வெவ்வேறு நிலைகளில் போராட்டம் சூடு பிடிக்கிறது

இந்நிலையில்தான் சென்னையில் 10.4.2018 அன்று ஐ.பி,எல் கிரிக்கெட் போட்டியை தடுத்து நிறுத்தும் போராட்டமும் உச்சநிலையை அடைந்தது. காவிரி மேலாண்மை அமைக்க கோரும் பெரும் போராட்டத்தில் ஒவ்வொரு தமிழனும், தமிழச்சியும் தமது பங்கேற்பது காலத்தின் கட்டாயமாக அது அமைந்தது.

அண்ணா சாலை – வாலாஜ சாலையை ஆயிரக்கணக்கான தமிழ் உணர்வாளர்கள் முற்றுகையிட்டனர். போக்குவரத்து நீண்ட நேரம் துண்டிக்கப்பட்டது. இது யாரும் எதிர்பாரதா ஓர் இன எழுச்சி!

அண்ணாசாலையில் தொடங்கி சேப்பாக்கம் விளையாட்டரங்கம் நோக்கி புறபட்டனர் இனப்போராளிகள்! பாரதிராஜா, பெ. மணியரசன், சீமான், வைரமுத்து  தமிமுன் அன்சாரி,கருணாஸ் இயக்குநர்கள் மு.களஞ்சியம், வெற்றிமாறன், அமீர், ராம், வ. கவுதமன், என பெரும் திரைப்படைப்பாளிகளும் அரசியல் தலைவர்களும்  வாலாஜா சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதில் இயக்குநர்கள் மு. களஞ்சியம், வெற்றிமாறன்,  மீது தடியடி நடத்தப்பட்டது. ஐபிஎல் போராட்டங்களை தடுக்க அண்ணா சாலை அருகே மாலை 5 மணிக்கு போராட்டம் நடத்துவோம் என்று பாரதிராஜா உள்ளிட்டோர் தெரிவித்திருந்தனர். ஐபிஎல் போட்டிகளை சென்னையில் நடத்தக் கூடாது என்று முழக்கமிட்டனர்!



காவல் துறை கேட்டதற்கு இனங்க அறவழியில் அமைதியான முறையில் போராட்டத்தை முன்னெடுத்தனர். ஆனால் எந்த முகாந்தரமும் மின்றி காவல்துறை தடியடி நடத்தினர். இச்சூழலில்தான் வெற்றி மாறன், களஞ்சியம் உள்ளிட்டோர் மீது காவல்துறை வன்மான தடியடியை அரங்கேற்றியது. வெற்றி மாறன் நெஞ்சில் ஏறினர் அதை தடுத்து முன் சென்ற மு. களஞ்சியத்தை எட்டி உதைத்தனர். நெஞ்சில் படுகாயத்தோடும் தலை, முதுகு பகுதிகளில் மிகுந்த வலியோடும் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத நிலையில், சென்னையில் ஐபிஎல் போட்டிகளை நடத்த எதிர்ப்புத் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது காவல் துறை நடத்திய தாக்குதலில் தமிழர் நல பேரியக்கத் தலைவர் மு.  களஞ்சியம் மற்றும் அந்த இயக்கத்தைச் சேர்ந்த மற்றொரு தோழர் தமிழர் நலப் பேரியக்கத்தின் கரூர் நகரப் பொறுப்பாளர் தோழர் ரமேஷ் விலா எழும்பு முறிந்து அதுஈரல் பகுதியில் முட்டிக்கொண்டு நிற்பதை மருத்துவர்கள் உறுதிபடுத்தியுள்ளனர். தொடர் சிகிச்சையில் மு. களஞ்சியம் அவரது அமைப்பைச் சார்ந்தோர் அனுமதிக்கப் பட்டுள்ளனர். 

இந்த முற்றுகைப்போராட்டத்தில் கலந்து கொண்ட அனைவரும் கைது செய்யப்பட்டு நள்ளிரவு விடுதலை செய்யப்பட்டனர். இதில், காவல் துறையை  தாக்கியதாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது கொலை முயற்சி, கொலை மிரட்டல் உள்ளிட்ட 10 பிரிவுகளின் கீழ்  பொய் வழக்குப் பதிவு செய்துள்ளது தமிழக காவல்துறை!

தமிழர் நலம் பேரியக்கத்தின் தலைவர் மு. களஞ்சியம், அவ்வியக்கத்தின் கரூர் நகரப் பொறுப்பாளர் ரமேஷ் கடுமையாக தாக்கப்பட்டுள்ளனர். இதில்,. ரமேஷ் அவசரச் சிகிச்சைப் பிரிவில் செயற்கை சுவாசத்துடன் ஒருநாள் சிகிச்சை பெற்ற அவர், இப்பொழுது சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டுள்ளார். இருப்பினும் அவர் தொடர் கண்காணிப்பில் இருக்க வேண்டும் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர். அமைதியான முறையில் போராட்டம் நடத்திய இப்போராளிகள் மீது காவல் துறை தாக்குதல் நடத்தியது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.   

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள இயக்குநர் மு. களஞ்சியம் – தோழர் ரமேஷ் ஆகியோரை அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும், திரைத்துறை சார்ந்தோரும், இன உணர்வாளர்களும் தொடர்ந்து சந்தித்து நலம் விசாரிக்கின்றனர்.

காவிரிக்கான தொடர் போராட்டம் செய்ததின் விளைவாக ஐ.பிஎல் கிரிக்கெட் அடுத்த தொடராட்டம் வேறொரு மாநிலத்திற்கு மாற்றிய அமைக்கப்பட்டதும், இராணுவ தளவாடங்களை பார்வையிட இந்திய பிரதமர் நரேந்திரமோடி  தமிழ் நாட்டில் காலாடி வைத்ததும், அதற்கு ஒட்டுமொத்த தமிழ்நாடும் கருப்பு கொடி காட்டியதும் தமிழர் போராட்டத்தின் அடுத்த பாய்ச்சல்!

நெஞ்சில் தீராத வலியோடு மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்ட இயக்குநர் மு. களஞ்சியத்தின் நெஞ்சாங்க்கூட்டில் துடிக்கும் இதயமும் தொடந்து “ காவிரி மேலாண்மை வாரியம் கேட்டே துடிக்கிறது”!

-    கவிபாஸ்கர்

No comments