Header Shelvazug

http://shelvazug.com/

தைவான் தீ விபத்து! தீயணைப்பு வீரர்கள் உட்பட 7 பேர் உயிரிழப்பு!

தைவான் நாட்டின் வட பகுதியான தவோயுவான் எனும் இடத்தில் அமைந்துள்ள மின்னணு தொழிற்சாலை ஒன்றில் இன்று ஏற்பட்ட தீவிபத்தில் 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களில் 5 தீயணைப்பு வீரர்களும் உள்ளடங்குகின்றனர்.

தொழிற்சாலைகள் நிறையவே அமைந்துள்ள இப்பகுதியில் உள்ள  மின்னணு தொழிற்சாலை ஒன்றில் இன்று ஞாயிற்றுக்கிழமை திடீரென தீவிபத்து ஏற்பட்டது. இதில் 8 மாடி கட்டிடத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் சிலர் சிக்கிக்கொண்டனர்.

சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் அப்பகுதிக்கு விரைந்த தீயணைப்பு துறையினர் மீட்புப்பணிகளில் ஈடுபட்டனர். அதோடு ஒரு குழுவினர் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

இந்த தீவிபத்தில் ஐந்து தீயைணைப்பு வீரர்கள் உட்பட ஏழு பேர் உயிரிழந்ததாக கூறப்பட்டுள்ளது. பலியான மற்ற இரண்டு பேர் தாய்லாந்து நாட்டை சேர்ந்தவர்கள் எனவும், அவர்கள் அந்த தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.