இந்தியாவிலிருந்து திரும்பிய குடும்பங்களில் 1,110 குடும்பங்கள் யாழில் மீள்குடியமர்வு


யாழ்.மாவட்டத்திலிருந்து இந்தியாவுக்கு இடம்பெயர்ந்து நாடுதிரும்பி, யாழ் மாவட்டத்தில் மீள்குடியேறிவரும் குடும்பங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதெனத் தெரிவித்த யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன், “இதுவரையிலும் 1,110 குடும்பங்கள் மீளக்குடியேறியுள்ளன” என்றார். “இந்தியாவில் புகலிடம் கோரியிருந்த, யாழ். மாவட்ட மக்கள், யாழில், மீள்குடியேறுவதற்காக, யாழ். மாவட்ட செயலகத்தில் புதிய பதிவுகளை மேற்கொண்டுவருகின்றனர்” என்றும் அவர் குறிப்பிட்டார். இந்தப் பதிவு நடவடிக்கைகள், மீள்குடியேற்ற புனர்நிர்மாண, சிறைச்சாலைகள் இந்து சமய கலாசார அலுவல்கள் அமைச்சின் எற்பாட்டில், யாழ் மாவட்ட செயலகத்தின் காணி கிளையில் யாழ். மாவட்ட செயலக மேலதிக செயலாளர் காணி எஸ்.முரளிதரன் தலைமையில் நேற்று (24) நடைபெற்றன. இதன்போது ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், அதற்காக புதிய வீட்டுத்திட்டங்களை வழங்க முன்வந்துள்ளனர். இதற்காக காணியில்லாத 25 குடும்பங்களுக்கு காணியுடன் சேர்ந்த புதிய வீட்டுத்திட்டத்தை வழங்க குறித்த தனியார் நிறுவனம் முன்வந்துள்ளது” என்றார்.

No comments