முகநூலிலிருந்து வெளியேறும் பிரபலங்கள்


முகநூல் மீதான தகவல் திருட்டு குற்றச்சாட்டுக்களை அடுத்து, ஸ்பேஸ் எக்ஸ்மற்றும் டெஸ்லா ஆகிய
நிறுவனங்களின் சிஇஓ எலன் மஸ்க், தங்களது முகநூல் பக்கங்களை அழித்துவிட்டனர்.
அமெரிக்க அதிபர் தேர்தலின் போது, கேம்பிரிட்ஜ் அனாலிடிகா என்னும் நிறுவனம், முகநூலிலிருந்து இருந்து 50 மில்லியன் வாக்காளர்களின் தகவல்களை திருடி, டொனால்டு டிரம்ப் தேர்தலில் வெற்றி பெற உதவியதாக செய்திகள் வந்தது.

இந்த விவகாரம் குறித்து முகநூல் நிறுவனத்தின் நிறுவனர் மார்க் ஸக்கர் பெர்க், முகநூல் பயனாளர்களின் தனிப்பட்ட தகவல் திருடப்பட்டது உண்மைதான் என்று மன்னிப்பு கேட்டார்.
எல்லாவற்றையும் விட, வாட்ஸ் அப் நிறுவனத்தின் இணை இயக்குனர் பிரையன் ஆக்டன், தனது கீச்சகப் பக்கத்தில், “இது முகநூலை அழிப்பதற்கான நேரம்” என்று பதிவிட்டு பிரச்சாரம் செய்ததால், முகநூல் நிறுவனம் திக்குமுக்காடி போயுள்ளது.

இந்நிலையில், ஸ்பேஸ் எக்ஸ் மற்றும் டெஸ்லா ஆகிய ராக்கெட் தயாரிப்பு நிறுவனங்களின் நிறுவனர் எலன் மஸ்க், தனது அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தை அழித்து, முகநூலிருந்து வெளியேறினார்.
முன்னதாக வாட்ஸ் அப் நிறுவனத்தின் இணை இயக்குனர் பிரையன் ஆக்டன், தனது கீச்சகப் பக்கத்தில், “இது முகநூலை அழிப்பதற்றகான  நேரம்”என்று குறிப்பிட்டதற்கு, பல பேர், ‘நீங்கள் ஒரு ஆண்மகனாக இருந்தால், உங்களது முகநூல் பக்கத்தை அழியுங்கள் பார்க்கலாம் என்று எலன் மஸ்கிற்கு சவால் விடுத்தனர்.

இந்த சவாலை ஏற்று, தற்போது எலன் மஸ்க், தனது முகநூலை அழித்துவிட்டார்.  இதன் காரணமாக, முகநூல் நிறுவனர் மார்க் ஸூக்கர் பெர்க்கிற்கு நெருக்கடிகள் ஏற்பட்டுள்ளது.

No comments